Local ·

நீர் விநியோகத் தடை 18 மணித்தியாலங்களாக குறைப்பு

நீர் விநியோகத் தடை 18 மணித்தியாலங்களாக குறைப்பு

April 03 (Citizen.lk News) - நுகர்வோரின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, திட்டமிட்ட நீர் விநியோகத் தடை நேரத்தை 18 மணித்தியாலங்களாகக் குறைக்க தீர்மானித்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

முன்னர் அறிவிக்கப்பட்ட நீர் விநியோகத் தடை திகதிகள் மற்றும் பாதிக்கப்படும் பகுதிகளில் எந்த மாற்றமும் இல்லை எனவும் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்தியுள்ளது.

Read next