November 26 (Citizen News) - இலங்கையின் கப்பல் துறை இலத்திரனியல் துறையில் 70 ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் குயின்ஸ் ரேடியோ மரைன் இலத்திரனியல் (தனியார்) நிறுவனம், தனது 70ஆவது ஆண்டு நிறைவை அண்மையில் கொண்டாடியது. இந்நிறுவனம் அமரர் சி. பி. மோத்தா (MBE) அவர்களால் 1956ஆம் ஆண்டு ‘குயின்ஸ் ரேடியோ அண்ட் டெலிவிஷன் கோர்ப்பரேஷன்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது. மூன்று தலைமுறைகளின் தலைமையின் கீழ், இது கப்பல் துறை இலத்திரனியல் மற்றும் விசேட பொறியியல் துறைகளில் ஒரு நன்மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது. கடந்த 32 ஆண்டுகளாக குயின்ஸ் குழுமத்திற்குத் தலைமை தாங்கி வரும் திரு தினேஷ் மோத்தா, குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதுடன், கப்பல் துறை இலத்திரனியல், விமானப் போக்குவரத்து கட்டமைப்புகள், தீ மற்றும் பாதுகாப்புச் சேவைகள் மற்றும் விசேட பொறியியல் துறைகளின் வளர்ச்சிக்கு வழிகாட்டி வருகிறார். சர்வதேச கப்பல்களுக்கு விசேட கடல்சார் இலத்திரனியல் சேவைகள், கப்பல் பழுதுபார்ப்பு, பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் இந்நிறுவனம், நாட்டின் துறைமுகங்களை கடல்சார் சேவை மையங்களாக வலுப்படுத்துவதற்கும் பங்களிக்கின்றது. திறமையான இலங்கைப் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களின் பங்களிப்புடன் நாட்டிற்கு அந்நியச் செலாவணியையும் ஈட்டித் தருகிறது.
குயின்ஸ் நிறுவனம் கடல்சார் வழிகாட்டுதல்கள், தொடர்பாடல் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதுடன், அவற்றிற்கான பராமரிப்புச் சேவைகளையும் வழங்குகிறது. JICA உதவியின் கீழ் திருகோணமலை துறைமுகத்தில் நிறுவப்பட்ட கப்பல் போக்குவரத்து முகாமைத்துவ கட்டமைப்பு மற்றும் பிரான்சின் ஏர்பஸ் (Airbus) நிறுவனத்திற்குச் சொந்தமான சிக்னாலிஸ் (Signalis) நிறுவனத்துடனான பொறியியல் ஒத்துழைப்புடன் கொழும்பு துறைமுகத்தில் நிறுவப்பட்ட அத்தகைய கட்டமைப்பு ஆகியன இதன் முக்கிய திட்டங்களில் அடங்கும். விமானப் போக்குவரத்துத் துறையில் குயின்ஸ் நிறுவனம், பண்டாரநாயக்க மற்றும் மத்தளை சர்வதேச விமான நிலையங்களுக்கான தரைத்தள தொடர்பாடல் கட்டமைப்புகள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்கான உயர் அதிர்வெண் (HF) ஒலிபரப்பிகள், டொப்ளர் VOR வழிகாட்டல் கட்டமைப்புகள் மற்றும் விமானம் தரையிறங்கும் கருவி கட்டமைப்புகள் (ILS) ஆகியவற்றையும் வழங்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பியூரோ வெரிட்டாஸ் (Bureau Veritas) நிறுவனத்திடமிருந்து ISO 9001:2015 சான்றிதழைப் பெற்றுள்ள குயின்ஸ் நிறுவனம், ஜப்பான் மற்றும் ஐரோப்பாவின் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதியாகவும் செயற்படுகிறது. வெளிநாட்டுத் தொழிற்சாலைகளில் பயிற்சி பெறும் இதன் இலங்கைப் பொறியியலாளர்கள், உள்ளூர் மற்றும் சர்வதேச கப்பல் உரிமையாளர்களுக்குத் தமது நிபுணத்துவச் சேவைகளை வழங்குகின்றனர். நவீன வசதிகளுடன் கூடிய செயலமர்வுகள் மற்றும் ஏழு தசாப்த கால அனுபவத்துடன், சர்வதேச கப்பல்களுக்கான சேவைகளை விரிவுபடுத்தி, நாட்டின் அந்நியச் செலாவணி வருமானத்திற்கான தனது பங்களிப்பை மேலும் அதிகரிக்க இந்நிறுவனத்திற்கு வாய்ப்புள்ளது.