Business ·

சைனீஸ் டிராகன் கஃபேயின் புதிய உணவகம் நீர்கொழும்பில் திறப்பு

சைனீஸ் டிராகன் கஃபேயின் புதிய உணவகம் நீர்கொழும்பில் திறப்பு
(Chinese Dragon Café தனது முதன்மைக் கிளையை நீர்கொழும்பில் திறந்தது)

November 25 (Citizen News) - இலங்கையின் சீன உணவுக் கலாச்சாரத்தில் எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக வாடிக்கையாளர் நம்பிக்கையை வென்ற முன்னணி உணவக வலையமைப்பான சைனீஸ் டிராகன் கஃபே (Chinese Dragon Cafe), தனது புதிய உணவகத்தை நீர்கொழும்பில் திறந்துள்ளது.  தனது வர்த்தக நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் மேலும் விரிவுபடுத்தும் வகையில் மேற்படி உணவகக் கிளை திறக்கப்பட்டுள்ளது.. நீர்கொழும்பு, சிலாபம் வீதி, இலக்கம் 48 இல் அமைந்துள்ள இந்தப் புதிய உணவகம், மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியிலிருந்து கொச்சிக்கடை நோக்கி 400 மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இது இலங்கையில் சைனீஸ் டிராகன் கஃபேயின் 13ஆவது உணவகமாகவும், உலகளாவிய ரீதியில் அதன் 14ஆவது உணவகமாகவும் திகழ்கிறது. 1942ஆம் ஆண்டு சீனத் தம்பதியினரால் பம்பலபிடிய பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய உணவகத்திலிருந்து உதயமான சைனீஸ் டிராகன் கஃபே, இன்று இலங்கையின் மிகவும் பிரபலமான சீன உணவக வலையமைப்பாக தடம்பதித்துள்ளது.  பம்பலபிடிய, கல்கிசை, நுகேகொடை, இராஜகிரிய, பெலவத்தை, வத்தளை, கந்தானை, கடுவலை, யாழ்ப்பாணம், காலி, கொத்தட்டுவ, கண்டி மற்றும் ஓரியன் சிட்டி ஆகிய பகுதிகளில் தனது உணவக வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ள இந்நிறுவனம், 2021ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகரில் தனது முதலாவது வெளிநாட்டு உணவகத்தைத் திறந்து சர்வதேச சந்தையிலும் காலடி பதித்தது.

சுற்றுலாத் துறை, கடல் உணவுகள் மற்றும் பல்வேறு கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட மக்கள் குழுவினரைக் கொண்டுள்ளதால், நீர்கொழும்பு நகரம் சைனீஸ் டிராகன் கஃபே உணவக வலையமைப்பின் விரிவாக்கத்திற்கான ஒரு விசேட இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. புதிய உணவகத்தின் ஊடாக நீர்கொழும்பு மக்களுக்கும் உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கும் சைனீஸ் டிராகன் கஃபேயின் புகழ்பெற்ற உணவுகளைச் சுவைப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஹொட் பட்டர் கட்டில்ஃபிஷ் (Hot Butter Cuttlefish) மற்றும் வாழை இலையில் பரிமாறப்படும் சீஃபுட் ஃப்ரைட் ரைஸ் (Seafood Fried Rice) உள்ளிட்ட பல்வேறு பிரபலமான உணவுகள் சைனீஸ் டிராகன் கஃபேயின் தனித்துவமான அடையாளத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பங்களித்துள்ளன. பல்வேறு ரைஸ் வகைகள், நூடுல்ஸ் உள்ளிட்ட சீன உணவு வகைகள் பலவற்றை வழங்கும் இந்த உணவக வலையமைப்பு, தரம், மாறாத சுவை மற்றும் நட்புறவான சேவை ஆகியவற்றின் மூலம் தலைமுறை தலைமுறையாக வாடிக்கையாளர்களின் அன்பையும் நம்பிக்கையையும் வென்றுள்ளது. நீர்கொழும்பின் புதிய உணவகம் குடும்பங்கள், நண்பர்கள் குழுக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இலகுவாக உணவருந்தக்கூடிய விசாலமான, நவீன உணவுச் சூழலைக் கொண்டுள்ளது. குடும்பத்தின் விசேட நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் மற்றும் வர்த்தகச் சந்திப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட தனியார் உணவருந்தும் அறையும் அங்கு நிறுவப்பட்டுள்ளது. இலவசமாக வீட்டிற்கே உணவு விநியோகம் செய்யும் வசதி, உள்ளக மற்றும் வெளிப்புற நிகழ்வுகளுக்கான உணவு வழங்கல் சேவைகள் (Catering), நிறுவனங்களுக்கான உணவு விநியோகத் தீர்வுகள் மற்றும் www.chinesedragoncafe.com இணையதளம் ஊடாக இணையவழியில் (Online) உணவுகளைப் பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதியும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது.

புதிய உணவகத் திறப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த சைனீஸ் டிராகன் கஃபேயின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு லஹிருவன் லக்மால்: “நீர்கொழும்பு என்பது கடல் உணவுகள், சுற்றுலாத் துறை மற்றும் பன்முகத்தன்மை கொண்ட வாடிக்கையாளர் சமூகத்துடன் தனித்துவமான அடையாளத்தைக் கட்டியெழுப்பியுள்ள வேகமாக வளர்ந்து வரும் ஒரு நகரமாகும். இச்சந்தையில் பாரிய வாய்ப்புகள் உள்ளதாக நாம் நம்புகிறோம். எமது சீன உணவுகளின் சுவைக்கு நீர்கொழும்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம். சைனீஸ் டிராகன் கஃபே அனுபவத்தை நீர்கொழும்புக்குக் கொண்டு வர முடிந்தமை குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நீர்கொழும்பு மக்களின் வாழ்வோடு நெருக்கமான ஒரு பங்காளராக மாறுவதே எமது எதிர்பார்ப்பாகும்.” என்றார். நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேலும் நெருக்கமாகி, தனது தனித்துவமான உணவுச் சுவையையும் சேவைத் தரத்தையும் மேலும் விரிவுபடுத்தும் நீண்டகாலத் திட்டத்தின் மற்றுமொரு முக்கிய படியாக நீர்கொழும்பு உணவகத் திறப்பைக் குறிப்பிடலாம். 84 வருடப் பெருமைமிகு வரலாறு, பல தலைமுறைகள் அறிந்த சுவை மற்றும் நவீன உணவருந்தும் அனுபவங்களை ஒன்றிணைக்கும் சைனீஸ் டிராகன் கஃபே, எதிர்காலத்தில் குருநாகல் நகரில் புதிய உணவகமொன்றைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, 1942ஆம் ஆண்டு பம்பலபிடிய பகுதியில் ஆரம்பமான வெற்றிகரமான பயணத்தை இலங்கையின் மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தி, தனது வாடிக்கையாளர்களுக்கு மேலும் நெருக்கமடைய நிறுவனம் எதிர்பார்க்கிறது.

 

Read next

'மெல்வா சவால் கிண்ணம் 2026' கிரிக்கெட் போட்டித் தொடரின் இரத்தினபுரி மாவட்ட சாம்பியன் கிண்ணத்தை வென்ற சன்னஸ்கம ஹார்ட்வெயார்
Calin Popular Awards 2026, விருது விழாவில் ஆண்டின் சிறந்த பெண் கல்வியாளருக்கான விருதை வென்று கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ சாதனை
சொத்து விற்பனைத் துறையில் ஐரோப்பாவின் பிரபல்யமான இலங்கை நிறுவனமாக Calin Popular Awards 2026 விருதை வென்றுள்ள Lighthouse நிறுவனம்