July 13 (Citizen.lk News) - வவுனியா - யாழ். வீதியில் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் இருந்த சில நடைபாதை வியாபார நிலையங்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன.
மாநகர சபையினால் குறித்த கடைகள் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளதுடன் அக்கடைகள் இருந்த பொருட்கள் மாநகர சபையின் உழவு இயந்திர பெட்டிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக மாநகர சபையினால் நடைபாதை கடைகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் வவுனியா புதிய பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் இருந்த தமிழ் மக்களுடைய கடைகள் ஞாயிற்றுக்கிழமை (13) அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.