August 29 (Citizen.lk News) - ஊழல் மற்றும் சதித்திட்டக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை செப்டம்பர் 12 ஆம் திதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, வௌ்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார்.
2022 பொது எழுச்சியின் போது சேதமடைந்த அங்கீகரிக்கப்படாத சொத்துக்கு சட்டவிரோதமாக இழப்பீடு பெற தனது உத்தியோகபூர்வ பதவியைப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.