News ·

உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

February 03 (Citizen.lk News) - 2025ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர (A/L) பரீட்சையின் Bio Systems Technology பாடத்திற்கான செயன்முறை பரீட்சை எதிர்வரும் சனிக்கிழமை (07)  ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பரீட்சை நாடு முழுவதும் அமைந்துள்ள 74 பரீட்சை நிலையங்களில் நடத்தப்படுவதுடன்,  எதிர்வரும் சனிக்கிழமை (07)  முதல் புதன்கிழமை (11)  வரை இடம்பெறவுள்ளது.

பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் (Admission Cards) சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் பதிவு செய்யப்பட்ட முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

Read next