Political · · 1 min read

இந்தியாவின் 77வது குடியரசு தின நிகழ்வில் நாமல் ராஜபக்ஷ உரை!

இந்தியாவின் 77வது குடியரசு தின நிகழ்வில் நாமல் ராஜபக்ஷ உரை!

January 27 (Citizen.lk News) - இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனத்தில் (KIIT) நடைபெற்ற இந்தியாவின் 77வது குடியரசு தின விழாவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உரையாற்றியுள்ளார். 

இதன்போது, நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டதாவது, 

2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போதும், 'டிட்வா' சூறாவளி பாதிப்பின் போதும் இந்தியா வழங்கிய உதவிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி. 

பேரிடர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளில் இருந்து இந்தியாவின் முன்னேற்றங்களை  இலங்கை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். 

இதன்போது, இந்தியா மற்றும் இலங்கை இடையே நிலவும் கிரிக்கெட் விளையாட்டு மற்றும் கலாசாரத் தொடர்புகளையும் நாமல் நினைவு கூர்ந்தார்.

விளையாட்டுத் துறையில் இளம் தலைவர்களை உருவாக்குவதற்கு இந்தியாவுக்கு பாராட்டையும் தெரிவித்தார்.  

தலைமைத்துவம் என்பது பதவி அல்ல; அது ஒரு பொறுப்பு. பொதுவான இலக்குகளை அடைவதற்காக மற்றவர்களை ஊக்குவிக்கும் ஒரு செயல்முறை என மாணவர்களிடையே நாமல் கூறினார்.

Read next

நுவரெலியா, இலங்கை — பிரித்தானியாவில் ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஒன்றியங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த உரைகள் புலம்பெயர் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக ரத்து
இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அமைச்சர் விஜித ஹேரத்துடன் ஐரோப்பிய பிரதிநிதி பேச்சு!