News ·

களனி ரஜமஹா விஹாரை மகா பெரஹெர: இன்று இரவு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்

களனி ரஜமஹா விஹாரை மகா பெரஹெர: இன்று இரவு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்

January 10 (Citizen.lk) - களனி ரஜமஹா விஹாரையில் வருடந்தோரும் நடத்தப்படும் மகா துரு பெரஹெர ஊர்வலம் காரணமாக, குறித்த வீதியூடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பெரஹர ஊர்வலமானது களனி ரஜ மஹா விஹாரையில் ஆரம்பமாகி, களனி ஸ்ரீ சுற்றுவட்டம், விஹார மாவத்தை, வாலன்கடை சந்தி, பஸ் நிலையம், பியகம வீதி வழியாகச் சென்று, களனி ரஜ மஹா விஹாரையின் பியகம வாயிலிலிருந்து விகாரை வளாகத்திற்குள் நுழைந்து பிரதான வாயில் வழியாக வெளியேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று சனிக்கிழமை (10) இரவு 07.00 மணி முதல் நாளை அதிகாலை 04.00 மணி வரை ஊர்வலத்தின் போது பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பத்தரமுல்லைலிருந்து பியகம நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் களனிமுல்ல போக்குவரத்து சமிக்ஞையின் வலதுபுறம் திரும்பி அம்பத்தளை வீதியூடாக கடுவளை வழியாக பியகம நோக்கிச் செல்லலாம்.

பத்தரமுல்லையிலிருந்து பேலியகொடை நோக்கி பயணிக்கும் அனைத்து வாகனங்களும் களனிமுல்ல போக்குவரத்து சமிக்ஞையின் இடதுபுறமாக திரும்பி தொட்டலங்க வீதி வழியாக பேலியகொடை நோக்கிச் செல்லலாம்.

பியகமவிலிருந்து பேலியகொடை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் பட்டிவில சந்தியில் வலதுபுறம் திரும்பி சபுகஸ்கந்த -கிரிபத்கொடை வழியாகச் செல்லலாம்.

பியகமவிலிருந்து பத்தரமுல்லை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் பண்டாரவத்தை சந்தியில் இடதுபுறமாகத் திரும்பி கடுவளை -அம்பத்தளை வீதி வழியாகச் செல்லலாம்.

பேலியகொடையிலிருந்து பியகம நோக்கி பயணிக்கும் அனைத்து வாகனங்களும் பேலியகொடையிலிருந்து கிரிபத்கொடை - சபுகஸ்கந்த வழியாக பயணிக்க முடியும்.

பேலியகொடையிலிருந்து பத்தரமுல்லை நோக்கி பயணிக்கும் அனைத்து வாகனங்களும் தொட்டலங்க வீதியில் களனிமுல்ல சமிக்ஞை ஊடாக பத்தரமுல்லை நோக்கி பயணிக்க முடியும்.

வராகொடயிலிருந்து பியகம நோக்கி பயணிக்கும் அனைத்து வாகனங்களும் பழைய கண்டிவீதி டயர்சந்தி, கிரிபத்கொடை - சபுகஸ்கந்த வழியாக பயணிக்க முடியும்.

பழைய கண்டி வீதியில் இருந்து பியகமவிற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் கிரிபத்கொடை, சப்புகஸ்கந்த மற்றும் பட்டிவில வீதி வழியாக செல்லமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read next