· 1 min read

இலங்கையின் விருந்தோம்பல் பாரம்பரியத்தின் புதிய முதலீடுகளுடன் Ceylon Hotels Corporation தனது 60வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது

இலங்கையின் விருந்தோம்பல் பாரம்பரியத்தின் புதிய முதலீடுகளுடன் Ceylon Hotels Corporation தனது 60வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது
(Lakehouse Hotel: then and now)

August 15 (Citizen News) - இலங்கையின் விருந்தோம்பல் துறையில் நீண்டகால நிலைத்தன்மையும் தனித்துவமான புகழையும் ஈட்டியுள்ள நாமமான Ceylon Hotels Corporation PLC (CHC) 2026-ல் தனது 60வது ஆண்டு பூர்த்தி விழாவைக் கொண்டாடுவதோடு, நாட்டின் விருந்தோம்பல் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதையும், புதிய தலைமுறை சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் அனுபவங்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய முதலீடு மற்றும் அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் தனது எதிர்காலத்தை வலுப்படுத்துகிறது.

1966 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க  Ceylon Hotels Corporation சட்டத்தின் கீழ் 1966-ல் நிறுவப்பட்ட CHC, இலங்கை ஒரு சர்வதேச சுற்றுலாத் தலமாக உருவெடுத்து வந்த ஒரு முக்கியமான காலகட்டத்தில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. அன்று முதல், CHC கடந்த அறுபது ஆண்டுகளாக நாட்டின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி மற்றும் பரிணாம வளர்ச்சியுடன் நெருக்கமான உறவை பேணி, இலங்கையின் விருந்தோம்பல் துறையின் பல முக்கிய அத்தியாயங்களுக்குப் பங்களித்துள்ளது.

 தனது தொடக்கத்திலிருந்தே, பிரதான நகரங்களுக்கு அப்பால் மலையகம், பண்டைய இராச்சியங்கள், வனசீவராசிகள் வலயங்கள் மற்றும் கடலோரப் பகுதிகள் வரை விருந்தோம்பல் சேவையை விரிவுபடுத்துவதில் CHC  ஒரு குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளது. அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹோட்டல்கள் மற்றும் விடுதிகள், தலைமுறை தலைமுறையாக வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நினைவுகளுக்குள் நிறந்துள்ள சிறப்புமிக்க இடங்களாக மாறியுள்ளதோடு, தங்குமிட வசதிகளுக்கு அப்பாற்பட்டு, இலங்கை உணவு, கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலை அனுபவிப்பதற்கான வாய்ப்பையும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவை வழங்கியுள்ளன.

இன்று, CHC-யின் ஹோட்டல் பட்டியலில் EKHO Hotels & Resorts, கண்டியில் உள்ள Queen’s Hotel மற்றும் Hotel Suisse ஆகியவையும், Heritage Collection இன் கீழ் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கும் விடுதிகளும் அடங்கும். இந்த ஹோட்டல்களும் தங்கும் விடுதிகளும் இலங்கையின் பல கலாச்சார, வரலாற்று மற்றும் இயற்கை சுற்றுலாத் தலங்களில் அமைந்திருப்பது CHC-யின் ஒரு தனித்துவமான பலமாகும்.

(Queen's Hotel: then and now)

தனது 60-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, CHC முதலீடு மற்றும் மேம்பாட்டின் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இதன் முக்கிய நோக்கம், தனது வரலாற்றுச் சிறப்புமிக்க ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளின் அடையாளத்தைப் பாதுகாத்து, இன்றைய பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ற உயர்தர விருந்தோம்பல் அனுபவங்களாக அவற்றை மாற்றுவதாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ், வரலாற்றுச் சிறப்புமிக்க புஸ்ஸெல்லாவ விடுதி புதுப்பிக்கப்பட்டுள்ளதோடு, பெலிஹுல்ஓயா மற்றும் கித்துல்கல விடுதிகளும், தத்தமது இடங்களின் இயற்கை அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து, மேலும் உயர்தரமான மற்றும் அந்தந்த இடங்களை மையமாகக் கொண்ட விருந்தோம்பல் அனுபவத்தை வழங்கும் வகையில் மறுவடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு விடுதிகளும் அக்டோபர் 2026-ல் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட உள்ளன.

கண்டியில் அமைந்துள்ள Hotel Suisseவும் விரிவான புனரமைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது, நகரின் நீண்ட வரலாற்றுடன்  இணைந்த அதன்  வரலாற்றுசிறப்பையும் தனித்துவமான அடையாளத்தையும் பாதுகாக்கும் வகையில் புத்துயிர் பெற்றுள்ளது. இந்த மேம்பாட்டுத் திட்டங்கள், CHC  தனது ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளுடன் தொடர்புடைய வரலாறு, கதைகள் மற்றும் அடையாளத்தை எதிர்கால சந்ததியினருக்குக் கடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதே சமயம், இன்றைய பயணிகள் எதிர்பார்க்கும் வசதி மற்றும் அனுபவங்களுடன் அவர்களை இணைக்கிறது

(Hotel Suisse: then and now)

CHCயின் அறுபது ஆண்டுகாலப் பயணம் என்பது அதன் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளைப் பற்றியது மட்டுமல்ல. தலைமுறை தலைமுறையாக விருந்தினர்களை வரவேற்று, உணவு தயாரித்து, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பராமரித்து, தத்தமது இடங்களின் கதைகளைப் பயணிகளுடன் பகிர்ந்து கொண்ட ஊழியர்களே இந்தப் பயணத்தில் ஒரு முக்கிய சக்தியாக இருந்துள்ளனர். வணிகப் பங்காளிகள், சுற்றியுள்ள சமூகங்கள் மற்றும் தலைமுறை தலைமுறையாகப் பயணிப்பவர்களும் இலங்கையின் விருந்தோம்பல் துறையில் CHC-க்கு ஒரு தனித்துவமான இடத்தைக் கட்டியெழுப்புவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர்.

இன்றைய சுற்றுலாப் பயணிகள் மேலும் உண்மையான அனுபவங்களையும், தாங்கள் செல்லும் இடங்களுடன் ஆழமான தொடர்பையும் விரும்புவதால், CHC தனது தனித்துவமான பாரம்பரியத்தை எதிர்காலத்திற்கான ஒரு வலுவான அடித்தளமாகக் கட்டியெழுப்புகிறது. CHC தனது ஹோட்டல் வலையமைப்பின் மூலம், ஒவ்வொரு இடத்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை நவீன விருந்தோம்பல் அனுபவங்களுடன் இணைக்கும் தனித்துவமான நிலையில் உள்ளது.

தீவு முழுவதும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தங்குமிட வசதியை வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க விடுதிகள் முதல் இன்றைய இடங்களை மையமாகக் கொண்ட விருந்தோம்பல் அனுபவங்கள் வரை, Ceylon Hotels Corporation இலங்கையின் சுற்றுலாத் துறையுடன் தொடர்ந்து பரிணமித்து வந்துள்ளது.

(Ambepussa Rest House: then and now)

பெருமைமிகு 60 ஆண்டுகாலப் பயணத்தைக் குறிக்கும் வகையில், CHC தனது பாரம்பரியத்தைப் பாதுகாத்து புத்துயிர் அளிப்பதற்கும், விருந்தினர் அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதற்கும், எதிர்காலத் தலைமுறைப் பயணிகளுக்காகப் புதிய நினைவுகளையும் கதைகளையும் உருவாக்குவதற்குமான அர்ப்பணிப்புடன் தனது அடுத்த அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறது.

1966 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட Ceylon Hotels Corporation PLC இலங்கையின் மிக நீண்ட கால வரலாற்றைக் கொண்டதொரு முன்னணி விருந்தோம்பல் நிறுவனமாகும். EKHO Hotels & Resorts, Queen’s Hotel, Hotel Suisse மற்றும் Heritage Collection அதன் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகள் பட்டியலில் காணப்படுவதோடு, Ceylon Hotels Corporation PLC இன் முகாமைத்துவ நடவடிக்கைகள் Galle Face Group (Pvt) Limited நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது.