Business · · 1 min read

கல்வித்துறை எதிர்கொள்ளும் மாற்றங்களை நிர்வகிப்பதற்கு புதிய நோக்கை வழங்கிய 11 ஆவது TISSL மாநாடு

கல்வித்துறை எதிர்கொள்ளும் மாற்றங்களை நிர்வகிப்பதற்கு புதிய நோக்கை வழங்கிய 11 ஆவது TISSL மாநாடு
A defining moment for educational leadership: The 11th TISSL conference in Sri Lanka 

July 12 (Citize News) - இலங்கை சர்வதேசப் பாடசாலைகள் சங்கத்தினால் (TISSL) ஏற்பாடு செய்யப்பட்ட 11வது வருடாந்த மாநாடு, "பாடசாலைகளில் மாற்றத்தை நிர்வகித்தல்" என்ற கருப்பொருளின் கீழ் அண்மையில், வாத்துவவில் அமைந்துள்ள புளூ வோட்டர்ஸ் ஹோட்டலில் வெற்றிகரமாக நடைபெற்றது. கல்வித் துறையில் பல தலைவர்கள், அதிபர்கள் மற்றும் நிபுணத்துவப் பேச்சாளர்களை ஒன்றிணைத்த இந்த மாநாடு, நவீன கல்வி எதிர்கொள்ளும் மாற்றங்களையும் சவால்களையும் வெற்றிகரமாக நிர்வகிப்பது குறித்த ஆழமான விவாதத்திற்கு வழிவகுத்தது. மாநாட்டின் தொடக்க அமர்வு பாரம்பரிய மங்கள விளக்கேற்றுதலுடன் தொடங்கியது. மேலும், TISSL தலைவர் தயான் பெர்னாண்டோ மற்றும் ஸ்தாபகத் தலைவர் டாக்டர் ஹர்ஷா அல்லேஸ் ஆகியோர் கல்வியின் எதிர்காலத்திற்குப் புத்தாக்கம், தொலைநோக்கு மற்றும் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். பல்வேறு கலாச்சாரக் கூறுகளால் வண்ணமயமாக விளங்கிய இந்நிகழ்வு, கல்வி என்பது வெறும் அறிவைப் பற்றியது மட்டுமல்ல, அது அடையாளம் மற்றும் விழுமியங்களைக் கட்டமைக்கும் ஒரு செயல்முறை என்பதையும் நினைவூட்டியது. சிறப்புரை ஆற்றிய டாக்டர் ஆகாஷ் ரவூத், நிலையற்ற மற்றும் வேகமாக மாறிவரும் உலகில் கல்வித் தலைவர்கள் கொண்டிருக்க வேண்டிய தார்மீகத் துணிவு, சுயபரிசோதனை மற்றும் தொலைநோக்கு ஆகிய விடயங்கள் மீது விஷேட கவனம் செலுத்தும் வகையில் உரையாற்றினார்..

The traditational lighting of the oil lamp by Founder Chairman Dr. Harsha Alles and Chairman of TISSL Mr. Dayan Fernando

மாற்றத்திற்குத் தயாரான ஒரு பாடசாலைக் கலாச்சாரத்தை உருவாக்குதல், புத்தாக்கத்தையும் கல்வி விளைவுகளையும் சமநிலைப்படுத்துதல், தனிப்பட்ட மீள்திறன் மற்றும் தலைமைத்துவச் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற அறிவார்ந்த கலந்துரையாடல்களால் இரண்டாம் நாள் நிறைந்திருந்தது. குறிப்பாக, “When Change Gets Hard: What School Leaders Don’t Talk About”” என்ற தலைப்பிலான உரையாடல், பாடசாலைத் தலைமைத்துவத்தின் மறைக்கப்பட்ட சவால்கள் குறித்து கருத்துக்களை வெளிப்படையாகப் பரிமாறிக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கியது. கல்வியின் எதிர்காலத்தை வெற்றிகரமாக வடிவமைக்கத் தேவையான தொலைநோக்கு, மீள்திறன் மற்றும் மனித உறவுகள் குறித்த ஒரு முக்கிய செய்தியுடன் நிறைவடைந்த TISSL 2026 மாநாடு, இலங்கையின் பாடசாலை சமூகத்திற்கு ஒரு புதிய திசையை வழங்கிய ஒரு தனித்துவமான வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

Participants at the TISSL Conference 2026

Read next